சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திரைக்கு வரவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப். 19 ஆம் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

The release date of actor Vijay Antonys film Sakthi Thirumagan has been changed.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.