சினிமாவில் கருப்போடு நடிக்கலாம்.. கற்போடு நடிக்க முடியாது.. கொடுமைகளை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் ஒரு பெண் நடிகையாக வெறும் திறமை இருந்தால் மட்டும் போதாது. ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்க வேண்டும். நடிகைகளுக்கு திறமை மட்டும் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அதுவே அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒகே என்று சொன்னால் உடனே பத்து படங்கள் புக் ஆகிவிடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை தமிழ் நடிகைகளை விட வட மாநில பெண்கள் தான் அதிகம் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் அட்ஜஸ்ட்மெண்ட் தான் என்று பல சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி வழக்கறிஞரும் மூத்தபத்திரிக்கையாளருமான தமிழா தமிழா பாண்டியன் கூறுகையில்,

”தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேடுகெட்ட நிலைமை இருக்கின்றது. ஒரு படம் தொடங்கிய பின் குறைந்தது பத்து முறையாவது அந்த ஹீரோயின் ஹீரோ உடன் இருக்க வேண்டும். அதுவும் அந்த ஹீரோ ஹீரோயின் புரிந்து கொள்வதை பொறுத்து அந்தப் பத்து நூறாககூட மாறலாம். இதை திரைப்பட துறையில் தவிர்க்கவே முடியாது. 40 வருடத்திற்கு முன்பு ஒரு உச்சபட்ச நடிகர் இருந்தார். ஒரு வில்லன் நடிகரின் மனைவியை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கிறார். உடனே அந்தப் பெண் மீது இவருக்கு ஆசை வருகிறது. அந்தப் பெண் சினிமா நடிகை கிடையாது”.

#image_title

“உடனே அந்த பெரிய நடிகர் அந்த வில்லன் நடிகரிடம் சென்று உன் மனைவியை என்னுடன் அனுப்பு என்று ஓப்பனாக அவரிடம் கேட்டுள்ளார். அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். சினிமா உலகில் இப்படித்தான் நடக்கும். நடிகையாக வேண்டும் என்றால் அவர் அந்த படத்தின் ஹீரோயின் ஹீரோவுடன் குறைந்தது ஒரு மாதமாவது தங்க வேண்டும். இது படம் முடியும் வரை தொடரும். அந்தப் படத்தின் ஹீரோ, ’இதற்கெல்லாம் சம்மதம் சொன்னால் நான் என்னுடைய தேதியை தருகிறேன். இல்லையென்றால் கிளம்புங்கள்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லுவார்”.

”இப்படி ஒரு வழக்கம் உண்டு. உடனே அந்த வில்லன் நடிகர்,’அதில் எனக்கு உடன்பாடில்லை’. என்று சொல்லிவிட்டார். உடனே அந்த ஹீரோ நான் நடிக்கும் படத்தில் இனி இந்த வில்லன் நடிகரை போடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டார். இதனால் பல படங்கள் அவருக்கு கிடைக்காமல் போனது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அந்த வில்லன் நடிகர் மதுவிற்கு அடிமையாகிறார். என் கணவர் இப்படி ஆகிவிட்டாரே என்று அந்த வில்லன் நடிகரின் மனைவி மனம் உடைந்து போனார்”.

”தன்னுடைய வீட்டிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தை கண்ட அந்த வில்லன் நடிகர் தன் மனைவியை காப்பாற்ற சென்று இவரும் தீயில் கருகி இறந்து போனார்கள். அதன் பின் சில நாட்கள் இவர்கள் இறப்பிற்கான காரணம் அந்த பெரிய நடிகர் தான் என்று தெரிய வந்தது. அந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. குற்ற உணர்வு ஏற்பட்டு அந்த குழந்தையை நான் வளர்க்கிறேன் என்று அந்த பெரிய நடிகர் கூறினார்”.

”ஆனால் அந்த குடும்பமே அந்த குழந்தைகளை கூட்டி சென்று விட்டது. இதனால் திரைப்பட உலகிற்கு ஒரு பெண் சென்று விட்டால் அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கவே முடியாது. அப்படி தப்பிக்க நினைத்தால் வாய்ப்பே கிடையாது. அதைத்தான் டி.ராஜேந்திரன் சொன்னார்,”ஒரு பெண் கருப்பா இருந்தா கூட நடித்து விடலாம். ஆனால் கற்புடன் இருந்தால் நடிகையாக முடியாது”. இந்த மாதிரியான சம்பங்கள் எல்லாம் திரைத்துறையில் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது”. என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.