அபூர்வ ராகங்கள் ரிலீசான அதே தியேட்டரில் கூலி… 50 வருடங்களை கடந்த ஆச்சரியம்..

Coolie: பெங்களூரில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து வந்த ரஜினி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தார். அந்த கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக அப்போது பிரபலமான இயக்குனராக இருந்த பாலச்சந்தர் வந்தபோது ஒரு மாணவராக பாலச்சந்திரிடம் சில கேள்விகளை கேட்டார். ரஜினியின் முகமும் கண்களும் பாலச்சந்தரை வசீகரிக்க அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிக்கு ஒரு முக்கிய வேடம் ஒன்றைக் கொடுத்தார்.

மேலும், ‘இது சின்ன வேடம் என ஃபீல் பண்ணாதே.. அடுத்து நான் இயக்கம் மூன்று படங்களில் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்’ என சொன்னார். சொன்னது போலவே வாய்ப்பு கொடுத்தார். அப்படி சினிமாவில் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ரஜினி. அதன்பின் ஹிரோவாக நடிக்க தொடங்கி ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக மாறினார். அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கிடைத்தது. இப்போதும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கிறார்.

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் ஆர்வத்தையும், ஹைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற 14-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஐந்து நாட்களுக்கு எல்லா காட்சிகளும் புக் செய்யப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் 100 கோடி வசூலை தொட்டிருக்கிறது. எனவே கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே 500 கோடி வியாபாரத்தை இப்படம் தொட்டிருந்தது. ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் சென்னையில் உள்ள சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் 1975ம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.

krishnaveni
#image_title

இப்போது 50 வருடங்கள் கழித்து கூலி படம் அதே தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இந்த பெருமை கிருஷ்ணவேணி தியேட்டருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. ரஜினி சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இது ஆச்சரியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களில் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் 50 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு தியேட்டரில் அதுவும் அபூர்வராகங்கள் வெளியான அதே தியேட்டரில் கூலி படமும் வெளியாவது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.