கூலி படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா..? இது கொடுமையின் உச்சம்.. கொந்தளித்த பிரபலம்
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூலி படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் உள்ள நிலையில் இந்த பாடத்திற்கான ப்ரீ புக்கிங் பறக்கிறது. காரணம் இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த தக் லைப் திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அடுத்ததாக தமிழ் சினிமாவும் ரசிகர்களும் நம்பிக்கை வைத்திருக்கும் திரைப்படம் கூலி தான்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளியான படத்தின் ட்டிரைலர் ரசிகர்களிடம் இன்னும் ஆர்வத்தை அதிகரிக்க செய்து இருக்கிறது. பேன் இந்தியா அளவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் கனவாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு ‘A’சர்டிபிகேட் கிடைத்தது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகர்மான வலைப்பேச்சு அந்தணன் கூலி படத்தின் டிக்கெட் விலை பகல் கொள்ளையாக இருக்கிறது என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார் மேலும் அவர் கூறியதாவது, ”தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணி காட்சிக்கு ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

”இப்படி செய்தால் இந்த படத்திற்கான கலெக்ஷன் என்பது நினைச்சுப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு பக்கம் ரஜினி வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இதெல்லாம் சரியா? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நேரடியாக படத்தை வெளியிடுவதால் இதன் டிக்கெட் விலையை குறைந்த பட்சம் 500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கட்டளை போட்டுள்ளார்கள். அதற்கு மேலும் டிக்கெட் விலையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த 500 ரூபாய் தயாரிப்பு பணத்திற்கு கொடுத்திட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்”.
”இது எவ்வளவு பெரிய கொடுமை. இது ரஜினி ரசிகர்களுக்கு பெருமையாக கூட இருக்கலாம் இந்த வயதிலும் இவ்வளவு டிக்கெட் விற்பனையாகிறது. இது மற்ற ஹீரோக்களுக்கு நடக்குமா? என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இங்கு தினக் கூலிகள் தான் அதிகம். அப்படி இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு இந்த டிக்கெட் விலை தலையில் இடி இறங்கியது போல் இருக்கும். இது போன்ற டிக்கெட் விலை உயர்வை ரஜினி போன்ற முன்னணி நடிகர் பேச வேண்டும் என்பது எனது ஆசை”.
”ஆனால் அவர் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரமாட்டார். அதனால் தியேட்டர் கட்டணங்கள் குறித்து ரஜினி எதிர்காலத்தில் கூட பேசப்போவதில்லை”. என்று கூறியுள்ளார். வெறி பிடித்த ரசிகர்கள் இப்படி வாரி வாரி கொடுத்தால் இந்த 1950 மாடல் வண்டி இன்னும் பல லட்சம் கிலோமீட்டர்கள் வரை தான் செய்யும். என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


