1000 கோடிக்கு வச்சிட்டாங்களே ஆப்பு.. கூலிக்கு இப்படி ஒரு நெருக்கடியா?..

Coolie: ரஜினியின் திரைப்படங்கள் முன்பெல்லாம் தமிழில் மட்டுமே வெளியாகும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாவது அதிகரித்துவிட்டது. பாகுபலி என்கிற தெலுங்கு படம் இப்படி எல்லா மொழிகளும் ஹிட் அடிக்கவே அதைத் தொடர்ந்து வந்த கேஜிஎப், பாகுபலி 2, கேஜிஎப் 2, புஷ்பா, காந்தாரா, புஷ்பா 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற பல திரைப்படங்கள் பேன் இந்தியா படங்களாக எல்லா மொழிகளிலும் வெளியாகி வசூலை குவித்தது. அதிலும் புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது.

இதனால் எல்லா பெரிய நடிகர்களுக்கும் தங்களின் படங்கள் பேன் இந்தியா படமாக வெளியாகி பல நூறு கோடி வசூலை அள்ள வேண்டும் என என்கிற ஆசை வந்துவிட்டது. ரஜினியின் ஜெயிலர் படமே தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியானது. படம் வெற்றி அடைவதற்காக எல்லா மொழிகளிலிருந்தும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்கள். மலையாள நடிகர் விநாயகக் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் கேமியா செய்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்திலும் தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, மலையாளத்திலிருந்து சவுபின் சாகிர், ஹிந்தியில் இருந்து அமீர்கான், கன்னடத்தில் இருந்து உபேந்திரா ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த படம் மூலம் 1200 கோடி வசூலை அள்ள வேண்டும் என சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் திட்டமிட்டு இருக்கிறார்.

coolie rajini
coolie rajini

சௌபின் சாகிர் மலையாளத்தில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். இவர் ஒரு திறமையான நடிகர். கடந்த சில வருடங்களாகவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்றது. இந்த சவுபின் சாகிர் கூலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டேவோடு மோனிகா பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருந்தார். எனவே கூலி படத்திற்கு கேரளாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாகவே கேரளாவில் கூலி படத்திற்கான முன்பதிவு களைகட்டி வருகிறது. முன்பதிவிலேயே சில கோடிகள் அங்கு வசூலாகி இருக்கிறது. கேரளாவில் கூலி படத்திற்கு மிகவும் அதிக செலவு செய்து மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்திருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆகஸ்டு 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் கூலி 25ஆம் தேதி வரை மட்டுமே கேரளாவில் திரையரங்குகளில் இருக்கும். ஏனெனில் ஆகஸ்டு 26 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால், பகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்கள் அங்கு வெளியாக உள்ளது. எனவே கண்டிப்பாக அந்தப் படங்கள் கேரளாவின் முழு தியேட்டர்களையும் கைப்பற்றி விடும். எனவே இந்த இரண்டு வாரத்திற்குள் வசூலை அள்ளி விட வேண்டும் என்கிற நெருக்கடி கேரள விநியோகஸ்தருக்கு இருக்கிறது. எனவேதான் மிகவும் செலவு செய்து கூலி படத்திற்கு அதிக அளவில் புரமோஷன் செய்திருக்கிறார்கள்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.