முதல் நாளே ரஜினியை வெறுப்பேத்திய லோகேஷ்.. வெளியில் வராத தகவலை சொன்ன பிரபலம்
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கூலி. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது இன்னும் இரு தினங்களில் படம் வெளியாக இருக்கிறது. ரஜினி லோகேஷின் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கிறார். அப்படி முதல் நாள் முதல் காட்சி எடுக்கப்படும் பொழுது லோகேஷ் மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார். இதனை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ”வழக்கமாக முதல் நாள் காட்சியை ஒரு ஹீரோவை வைத்து தான் எடுப்பார்கள்.

அப்படி எடுக்கும் பொழுது ஒரு முருகன் படம் அல்லது ஒரு பிள்ளையார் படம் அல்லது கோவிலில் சாமி கும்பிடுகிற மாதிரி காட்சிகள் எடுப்பது வழக்கம். அங்கதான் முதல் சீன் வைப்பார்கள். அதிலிருந்து தான் படம் ஆரம்பமாகும். ஆனா கூலி படத்தில் ரஜினி முதல் நாள் முதல் காட்சியில் ஒரு பிணத்திற்கு மாலை போடுவது போல் காட்சி எடுத்திருக்கிறார் லோகேஷ். இந்தக் காட்சியை கேட்டதும் ரஜினியை பயங்கர ஷாக் ஆகிவிட்டார்”.
’என்னுடைய கெரியர்லயே இது போன்று ஒரு காட்சி அமைத்து எந்த ஒரு இயக்குனரும் எடுத்ததே இல்லை. லோகேஷ் முதல் தடவை அப்படி எடுக்கும் போது எனக்கு ஒரு சிறிய அதிருப்தி இருந்தது. அன்றிலிருந்து லோகேஷ் இந்த கதையில் ஏதோ சொல்ல வருகிறார் நாம் அவருக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று அவர் பேச்சை கேட்டு நடித்தேன்’.

”என்று ரஜினியே சொல்லி இருக்கிறார். ட்ரெய்லரில் வெறும் ஹார்பரை மட்டும் காட்டி இதில் கதை நகர்வது போல் கட் செய்திருந்தார் லோகேஷ். ஆனால் உண்மையில் கூலி படத்தின் கதை அது கிடையாது. படத்திற்கு படம் கதைகளத்தில் புதுமை செய்துவரும் லோகேஷ் இந்த படத்திலும் புதிதாக ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பார்”. என்று கூறியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


