Coolie: 1000 கோடி கன்ஃபார்ம்! பட்ஜெட்.. டேபிள் ப்ராஃபிட்டுனு பட்டைய கிளப்பும் ‘கூலி’

கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அந்த படத்தின் முதலில் நான் முதல் காட்சியை பார்க்க ஒரு பெரும் கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. நார்த் இந்தியாவில் ஒரு பெரிய கலெக்சன், பெரிய ஓபனிங் ,இந்த படத்திற்கு வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 2700 ஸ்கிரீன்களில் கூலி திரைப்படத்தை நார்த் இந்தியாவில் திரையிட போகிறார்களாம் .அங்கு மட்டும் இந்த படத்தின் டேபிள் profit கிட்டத்தட்ட 200 கோடி என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார்களாம் .

இதனுடைய மொத்த பட்ஜெட் 375 கோடி. மொத்தமாக 600 கோடி டேபிள் பிராஃபிட்டை இந்த படம் இப்போதே எடுத்து விட்டது. இப்படி ஒட்டுமொத்தமாக ரஜினிக்குரிய திருவிழாவாக வேறு எந்த படத்திலும் இப்படி நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது .பாட்ஷா, படையப்பா என பெரிய மாஸ் படங்கள் எல்லாம் வந்தன. இருந்தாலும் இந்த படத்திற்கான ஒரு ஹைப் வேற எந்த படத்திலும் இருந்ததாக தெரியவில்லை. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ். இன்றைய 2கே கிட்ஸ்களின் பல்ஸை பிடித்து பார்ப்பவர். கமலுக்கே அப்பேற்பட்ட வெற்றியை கொடுத்த லோகேஷ் ரஜினிக்கு சும்மாவா விடுவார்.

லியோ படத்தில் இரண்டாம் பாதி சரியாக இல்லை என்ற ஒரு விமர்சனம் அவரை பெரிய மனக் காயத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து லோகேஷுக்கு பெரிய அளவில் பேட்டி கொடுக்க வேண்டாம் என சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அதைப்போல எல்லா படங்களுக்கும் கப் ,ஃபயர் எமோஜியை தெறிக்கவிடும் அனிருத் கூலி படத்திற்கு அப்படி எதுவும் நான் பண்ண மாட்டேன். இது வேறு மாதிரியான படம் என்ற வகையில் கூறியிருந்தார். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் திரைப்படம் டி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் முதன் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதுவும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான். இன்று அதே நாளில் தான் இவருடைய கூலி திரைப்படமும் கிருஷ்ணவேணி திரையரங்கில் ஒளிபரப்பாக உள்ளது. அதனால் ரஜினியின் 50 ஆவது ஆண்டு விழாவை அந்த திரையரங்கில் ஒரு விழாவாக கொண்டாட இருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் ஆந்திரா தெலுங்கானாவில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் ஜூனியர் என்டிஆரின் வார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அவருக்கு சீனியர் நடிகரான நாகார்ஜுனா கூலி திரைப்படத்தில் ஒரு முரட்டுத்தனமான வில்லனாக நடித்திருப்பதால் கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதுவரை ஆந்திராவில் ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக ரொமான்டிக் ஹீரோவாகவே பார்த்து பழகிய நாகர்ஜுனாவை இந்த படத்தில் ஒரு மாஸ் வில்லனாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப ரஜினியும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நாகர்ஜூனாவை பற்றி பெரிய அளவில் பேசி இருந்தார். அதுவும் ஆந்திராவில் இந்த படத்தின் மீது ஒரு ஹைப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதற்கேற்ப ரஜினியும் நாகர்ஜுனாவும் இந்தப் படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கூலி படத்தில் சீனியர் நடிகர்கள் தான் நடித்திருக்கிறார்கள். இதில் சவுபின் சாகிர் மட்டும் குறைந்த வயதுக்காரர் .

இப்படி சீனியர் நடிகர்களை வைத்து ஆயிரம் கோடி எதிர்பார்ப்பில், எப்படியா இந்த படத்தை கொண்டு போறீங்க என்ற அளவுக்கு ஒரு ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கூலி திரைப்படம். சீனியர்களை பார்த்தால் பொதுவாக சொல்வது கிரின்ச் பண்ணுகிறார்கள், பூமர் அங்கிள் என்றுதான் கூறுவார்கள். ஆனால் இந்தப் படத்திற்காக பெரும்பாலும் டிக்கெட் புக் செய்தவர்கள் இன்றைய டூ கே கிட்ஸ்கள்தான். இப்படிப்பட்ட வரவேற்பு இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது தான் பெரிய விஷயம். இப்படி நாளுக்கு நாள் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே வருகின்றன. எப்படியும் இந்தப் படம் ஆயிரம் கோடியை நெருங்கும் என்று தான் கூறுகிறார்கள். அதை இன்னும் ஓரிரு தினங்களில் பொறுத்திருந்து பார்ப்போம் .இந்த சுவாரசிய தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.