கூலி விழாவில் ரஜினி கட்டியிருந்த காஸ்ட்லி வாட்ச்!.. என்ன விலை தெரியுமா?..

சமீபகாலமாகவே திரை பிரபலங்கள். பெரிய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆகியோர் தங்கள் கைகளில் கட்டி இருக்கும் விலையுயர்ந்த வாட்ச் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அரசியலில் பெரிய பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைகளில் கட்டி இருக்கும் வாட்சின் விலை சில கோடிகள் என்றெல்லாம் இதற்கு முன்பு செய்திகள் வெளியானது.

அம்பானியின் மகன், முதல்வரின் மகன், மம்முட்டி மகன் துல்கர் சல்மான், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஷாருக்கான், கமல், அமீர்கான், லோகேஷ் கனகராஜ், தனுஷ் போன்றவர்கள் தங்கள் கையில் கட்டி இருக்கும் காஸ்ட்லி வாட்ச்சின் விலை பற்றிய செய்திகள் இதற்கு முன்பு வெளியானது.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் சில லட்சங்களில் வாட்ச் கட்டியிருந்தால் என்ன தவறு என ஒரு பக்கம் சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஒருபக்கம் ‘100 ரூபாய் வாட்ச் என்றாலும் ஒரு கோடி ரூபாய் வாட்ச் இரண்டுமே ஒரே நேரத்தைதான் காட்டப் போகிறது. பணம் வைத்திருக்கிறார்கள்.. வாங்கி கையில் கட்டிக் கொள்கிறார்கள்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

#image_title

இந்நிலையில்தான் இதில் ரஜினியும் சிக்கியிருக்கிறார் கூலி பட ஆடியோ விழாவுக்கு வந்த ரஜினி கையில் ஒரு வாட்ச் கட்டி இருந்தார். ஒமேகா ஸ்பீட் மாஸ்டர் டார்க்மூன் கலெக்ஷன் வகையை சேர்ந்த அந்த வாட்ச்சின் விலை 13 லட்சம் என சொல்லப்படுகிறது.

இந்த தகவலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மிகவும் எளிமையானவர் என பலராலும் சொல்லப்படும் ரஜினி 13 லட்ச ரூபாய்க்கு வாட்ச் கட்டிருக்கிறார் என அவரை பிடிக்காதவர்கள் விமர்சித்து வருகிறார்கள். 150 லிருந்து 200 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினி 13 லட்ச ரூபாய்க்கு வாட்ச் கட்டினால் என்ன தவறு?’ என்று அவரின் ரசிகர்கள் முட்டு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.