Coolie: கபாலி படத்துக்கு பிறகு ‘கூலி’ படத்துக்குத்தான் இப்படி ஒரு மவுசு! என்ன மேட்டர் தெரியுமா?
ரஜினி படம் என்றாலே ஒரு தனி மவுசு தான். கிட்டத்தட்ட சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து இன்னும் ஒரு வசூல் மன்னனாக சூப்பர் ஹீரோவாக அனைவருக்கும் பிடித்த நடிகராக மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கிறார் ரஜினி. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பப்படும் ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார். இவருடைய ஸ்டைல், ஹியூமர், நடிப்பு என இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது .சமீபத்தில் கூலி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றி மிகவும் சிம்பிளாக கூறியிருந்தார்.
அது அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி ஆக அமைந்தது. தான் எப்படி சினிமாவில் வந்தேன்? பஸ் கண்டக்டர் ஆனது எப்படி? எப்படியெல்லாம் இருந்தேன் என்பதை பற்றி அந்த மேடையில் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தார் ரஜினிகாந்த். லைட் மேன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்கு வந்திருக்கிறார் .ஆனால் அவரை இந்த சினிமா சூப்பர் ஸ்டார் ஆக்கி அழகு பார்த்திருக்கிறது. இன்னும் இரண்டே நாட்களில் வெளியாக இருக்கின்றது அவருடைய கூலி திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் கூலி. தமிழ் மட்டுமல்ல ஆந்திரா கனடா பாலிவுட் கேரளா என எல்லா மாநிலங்களிலும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு காரணம் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள். எல்லா மொழிகளிலும் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக இருக்கின்றது. ரிலீசுக்கு முன்பே இந்த படம் டேபிள் profitஆக 600 கோடியை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. புக்கிங் ஓபன் ஆகி சில நிமிடங்களிலேயே அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது .வெள்ளி சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கலெக்ஷனில் பெரிய சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் தன்னுடைய தியேட்டரில் இந்த மூன்று நாட்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்காக மொத்த டிக்கெட்டையும் வாங்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு வேறு எந்த படத்திற்கும் இப்படி நடந்ததில்லை. ஆனால் கபாலி திரைப்படத்தில் இது போன்று சம்பவம் நடந்தது.
அதுதான் முதல் முறை. கபாலி திரைப்படத்திற்காகத்தான் முதல் முதலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்காக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வைத்திருந்தது. அதன் பிறகு இப்போது கூலி திரைப்படத்திற்கு தான் மொத்த டிக்கெட்டுகளையும் பிளாக் செய்து வைத்திருக்கிறார்கள் என தியேட்டார் உரிமையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


