முதல் தமிழ் சினிமா!.. அமெரிக்காவில் ரெக்கார்ட் பிரேக் செய்த கூலி..
Coolie: உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு தற்போது கூலி ஃபீவர்தான் அதிகமாக இருக்கிறது. ரஜினி பட ரிலீஸ் என்றாலே பெரும்பாலான ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தியேட்டர்கள் திருவிழாவாக மாறும். கடந்த 40 வருடங்களுக்கு மேல் இதை தக்க வைத்திருப்பதுதான் ரஜினியின் மிகப்பெரிய சாதனை.
தற்போது அவரின் கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. பக்கா ஆக்சன் திரில்லர் படங்களை கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியுடன் கைகோர்த்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் மிகவும் அதிகப்படியாக விற்பனையாகி வருகிறது.
முன்பதிவில் எந்த ஒரு தமிழ் படமும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை என சொல்லும் அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் கூலி சாதனை செய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் உலகம் முழுவதும் கூலி படத்திற்கான முன்பதிவிட்டு டிக்கெட் 100 கோடியை நெருங்கியது. முன்பதிவிலேயே 100 கோடி என்றால் இப்படம் கண்டிப்பாக 1200 கோடி வரை வசூல் செய்யும் என பலரும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் வட அமெரிக்காவில் பிரிமியர் காட்சிக்காக 2 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பிரீமியர் காட்சி 15ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


