அந்த கேரக்டருல நடிச்சேனு நெப்போலியன், சரத் என்னை வெறுத்தாங்க! எம்.எஸ்.பாஸ்கர் பகிர்ந்த தகவல்

சமீபத்தில் பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வாங்கி இருக்கிறார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராகத்தான் பணியாற்றினார். அதன் பிறகு சின்னத்திரை வெள்ளித்திரை என இன்று ஒரு மூத்த நடிகராக தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவருடைய படங்களில் இவருக்கு என ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவர் நடித்த படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கேரக்டருமே வித்தியாசமானதாகவே இருந்திருக்கும். இவருடைய உடல் மொழி வசனம் என ஒரு தனித்துவமான நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார் எம் எஸ் பாஸ்கர். மற்ற மொழி படங்கள் தமிழில் ரீமேக் ஆகும்போது அந்த படங்களுக்கு பெரும்பாலும் எம் எஸ் பாஸ்கர் வாய்ஸ் கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் இவருடைய திரை அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். முதலில் மாயாவி என்ற சீரியல் மூலமாகத்தான் இவர் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அதன் பிறகு சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டரில் அவர் முழுக்க காது கேட்காதவர் மாதிரி தனது காதில் கை வைத்தபடியே நடித்திருப்பார்.

msbaskar

அந்த சீரியலை பார்த்த கலைஞர் ராதிகாவை அழைத்து யாருமா இந்த பையன் எதார்த்தமாக நடிக்கிறான் இவனை அப்படியே பயன்படுத்திக் கொள் என சொன்னாராம். அதன் பிறகு நான்கு வாரங்களில் முடியக்கூடிய அந்த கேரக்டரை சீரியல் முடியும் வரை அதாவது ஆறு வருடங்கள் அந்த கேரக்டரில் நடித்ததாக எம் எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார் .

அதன் பிறகு செல்வி தொடரில் ஆண்டவர் லிங்கம் என்ற கேரக்டரில் ஒரு மோசமான வில்லனாக நடித்திருப்பார் எம் எஸ் பாஸ்கர். அந்த தொடரில் இவர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவருடைய அம்மா எம்எஸ் பாஸ்கருடன் பேசவே மாட்டாராம். அதேபோல இவருடைய மனைவியும் சரியாக பேசவே மாட்டாராம். ஏன் இவருடைய மகள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியை ஒருநாள் இவரை அழைத்து ஏன் நீங்கள் நல்ல ரோலில் நடிக்க கூடாது என கேட்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு இந்த ஆண்டவர் லிங்கம் கேரக்டர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு நெப்போலியன் சரத்குமார் உள்பட அந்த கேரக்டரை பார்த்த பிறகு ஏன் இப்படி நடித்தீர்கள்? முகத்தில் விஷத்தை கக்குகிறீர்களே? பட்டாபி என்ற ஒரு நல்ல கேரக்டரில் நடித்த நீங்களா இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளீர்கள் .வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே என அவர்களும் தன்னை வெறுத்ததாக எம் எஸ் பாஸ்கர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.