கூலிக்கு வாரி இறைத்த சன் பிக்சர்ஸ் மாறன்.. சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா..?
இந்த வருடம் தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான், சௌபின் ஜாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். பேன் இந்தியா அளவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் இதுவரை எவ்வளவு லாபம் அடைந்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் பிசினஸ் ரிப்போட்டை பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சனம் ஆன வலைப்பேச்சு பிஸ்மி மேலும் அவர் கூறியதாவது , ”கூலி இன்று டாக் ஆப் தி டவுனாக இருக்கும். ஏனென்றால் ரஜினியின் திரைப்பயணத்தில் இது அவருக்கு 50 வது வருடம். அந்த சமயத்தில் கூலி படம் வெளி வருவது ஒரு சிறப்பான விஷயம் தான்”.
“மேலும் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை பண்ணுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கூலி படம் ப்ரீ பிசினஸில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்தப் படத்துடைய டிஜிட்டல் ரைட்ஸ் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளது. சாட்டிலைட் ரைட்ஸ் சுமார் 75 கோடியாக இருக்கலாம். மேலும் வெளிநாடுகளில் சுமார் 87 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது”.

”அதன் பிறகு தமிழ்நாடு தியேட்டரிக்கல் விற்பனை, அவரது உறவு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூலம் ரிலீஸ் செய்கிறார்கள். அதே நேரத்தில் கூலி படம் 100 கோடி ரூபாய் ஷேர் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடப்பதற்கான வாய்ப்பும் அதிகம். கர்நாடகா தியேட்டரில் விற்பனை பொருத்தவரை சுமார் 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கூலி படம் சுமார் 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது”.
’மேலும் கேரளா தியேட்டரிக்கல் விற்பனையைப் பொறுத்தவரை சுமார் 15 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. மேலும் கூலி படத்திற்கான ஆடியோ ரைட்ஸ் வேல்யூ பொறுத்தவரையில் 30 கோடி இருக்கும் என்று தெரிகிறது. வட இந்தியா தியேட்டரிக்கல் விற்பனை சுமார் 30 கோடி. ஆக மொத்தம் கூலி படத்திற்கான வியாபாரம் மட்டும் சுமார் 530 கோடியாக இருக்கிறது”.
”இந்த 530 கோடியில் கூலி படத்தின் பட்ஜெட் என்ன அந்த படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். இதில் ரஜினிக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 50 கோடியும், பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு 20 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு 15 கோடியும் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகார்ஜுனாவுக்கு 10 கோடியும், சத்யராஜுக்கு 5 கோடியும், கன்னட நடிகர் உபேந்திராவுக்கு 4 கோடியும், ஸ்ருதிஹாசனுக்கு 4 கோடியும் இந்த படத்தில் மோனிகா என்ற ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் பூஜா ஹெக்டே”.

”மலையாள நடிகர் சௌபின் சாகிர்க்கு 1 கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் எல்லாம் சேர்த்து 13 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சம்பளம் மட்டும் 275 கோடி ரூபாய் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கான தயாரிப்பு செலவு 60 கோடி. விளம்பர செலவு 20 கோடி ரூபாய் ஆக மொத்தம் 355 கோடி ரூபாய் இந்த படத்திற்கான பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளது சன் பிக்சர்ஸ்”. இதுதான் கூலி படத்திற்கான தயாரிப்பு செலவுகள்.
“530 கோடி ரூபாய் வியாபாரத்தில் பட்ஜெட் 355 கோடியை கழித்தால் இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த நிகர லாபம் ரிலீஸ் க்கு முன்பே அவர்களுக்கு கிடைத்த டேபிள் ப்ராபிட் 175 கோடி ரூபாய் இன்றைய தேதியில் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பது என்பதே மிகப்பெரிய ரிஸ்க். அதற்கு காரணம் டிஜிட்டல் ரைட்ஸ் பெரும்பாலும் விலை போவதில்லை அதற்கான டிமாண்ட் இல்லை. மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் முன்பு போல் யாரும் ஆர்வம் காட்டவில்லை”.
”இந்த சூழ்நிலையில் பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதே ரிஸ்க். இப்படி ஒரு சூழல் நிலவுகிற இந்த காலகட்டத்தில் ரஜினியை வைத்து 355 கோடி முதலீடு செய்து படம் வெளியாவதற்கு முன்பே 175 கோடி லாபத்தை பெற்றுள்ளது என்பது மிகப்பெரிய சாதனை தான்”. என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் ரிலீஸ் க்கு முன்பு கிடைக்கப்பெற்ற தகவல்கள் படம் நன்றாக ஓடும் பட்சத்தில் இதன் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


