படிக்கும் வயதில் சிவக்குமாருக்கு கிடைத்த உதவி.. அகரம் உருவாக காரணம்.. ஒரு செம ஃபிளாஷ்பேக்..

Actor Suriya: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி துவக்கத்தில் சாக்லேட் பாய் லுக்கில் பல படங்களிலும் நடித்தார். இவரின் தோற்றத்தை மாற்றியவர் இயக்குனர் பாலா. நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் சூர்யாவை மொத்தமாக மாற்றினார். அதேபோல் கௌதம் மேனனும் காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் மூலம் சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றினார்.

அதன்பின் சிங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறினார் சூர்யா. அவரின் ஜெய்பீம், சூரரைப் போற்று போன்ற படங்கள் சூர்யாவை சிறந்த நடிகர் என காட்டியது. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான கங்குவா ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் சூர்யாவுக்கு கருப்பு பணம் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

ஒரு பக்கம் அகரம் பவுண்டேஷன் என்கிற நிறுவனத்தை தொடங்கி கல்விக்கு பணம் இல்லாத ஏழை குழந்தைகளை கண்டறிந்து அவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார் சூர்யா. அகரம் பவுண்டேஷன் துவங்கி 15 வருடம் ஆனது தொடர்பான விழா சமீபத்தில் நடந்தது. இதில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவக்குமார்ம் வெற்றிமாறன், கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அகரம் பவுண்டேஷன் மூலம் இதுவரை 6378 மாணவர்கள் கல்வி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 4800 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகரம் பவுண்டேஷன் மூலம் பல மருத்துவர்களும், இன்ஜினியர்களும் உருவாகி இருக்கிறார்கள் சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

#image_title

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சூர்யா பவுண்டேஷன் ஏன் உருவானது என்பது பற்றி பேசி இருக்கிறார். அப்பாவுக்கு (சிவக்குமார்) 10 மாதம் இருக்கும் போதே அவரின் அப்பா இறந்து விட்டார். அவரின் உறவினர்களில் படித்தவர்கள் யாருமே இல்லை. அப்பா எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவரின் ஆசையை புரிந்து யாரோ ஒருவர் சம்பந்தமில்லாமல் அப்பாவை நம்பி படிக்க வைத்தார்.

அவரால்தான் அப்பா படித்து சென்னை வர முடிந்தது. எங்களுடைய வாழ்க்கையும் மாறியது. எங்களுக்கு இந்த அன்பு எல்லாம் கிடைத்திருக்கிறது. இப்படி சம்பந்தமில்லாத ஒருவர் செய்த உதவி எங்கள் குடும்பத்தை மாற்றியது. இதையேதான் நான் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என நினைத்தேன். அகரத்தில் படிக்கும் மாணவர்களில் 88 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தான் என பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.