கூலி பார்த்துவிட்டு லதா ரஜினிகாந்த் அடித்த கமெண்ட்… ரஜினி செம ஹேப்பி..
Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகி இருக்கும் கூலி திரைப்படம்தான் இப்போது டாக் ஆப் தி டவுன். ஏனெனில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களாகும். குறிப்பாக லோகேஷின் படங்கள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் படங்களை வித்தியாசமான திரைக்கதை மூலம் கொடுக்கிறார் லோகேஷ்
கமல் எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும் எவ்வளவோ படங்களை தயாரித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்த விக்ரம் படம்தான் அவருக்கு அதிக வசூலை கொடுத்த படமாக இருக்கிறது.
அதேபோல் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்த லியோ படத்திற்கு வந்தது போல ஒரு எதிர்பார்ப்பு இதுவரை எந்த படத்திற்கும் வந்தது இல்லை. பல மாதங்கள் பல ஊடகங்கள் அந்த படத்தைப் பற்றியே பேசியது.

இப்போது ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது 14ஆம் தேதி வெளியாக உள்ளது எனவே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே கூலி படம் பெரிய சாதனையை செய்திருக்கிறது. டிக்கெட் முன்பதிவில் இதுவரை 60 கோடி வசூலை பெற்றுள்ள கூலி இன்னும் இரண்டு நாட்களில் 80 கோடி வரை வசூல் ஆகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாதியை ரஜினியின் மனைவி லதா சமீபத்தில் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு ‘இதுவரை நீங்கள் எவ்வளவோ படத்தில் நடித்திருந்தாலும் இதுபோல ஒரு படத்தில் நீங்கள் நடித்ததில்லை.. மிகவும் வித்தியாசமாக இருக்கிறது’ என ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். இதனால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


