அஜித்தை கெடுத்ததே ரஜினி தான்.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் அஜித். 75 வயதிலும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷன் வாக்கிங்கில் நடந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ’கூலி’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஓபனிங் மற்றும் கலெக்ஷன் கொடுத்த படமாக கூலி இருக்கும் என்று சினிமா விமர்சர்களின் கருத்தாக உள்ளது.

இந்த ஆண்டு இரு படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார் கூட்டணியில் உருவாக இருக்கிறது. அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஏகே 64 பற்றிய அப்டேட்டுகள் காட்டு தீ போல் பரவி வருகிறது.

#image_title

அடிப்படையில் அஜித் ரஜினியின் தீவிர ரசிகர். அதனாலேயே ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான பில்லாவை ரீமேக் செய்யும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது. அதுவரை தோல்வி படங்கள் கொடுத்து துவண்டு கொண்டு இருந்த அஜித் பில்லா படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அதேபோல ரஜினியும் கூலி இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை பயன்படுத்தி இருப்பார். என்னதான் இருவருக்கும் இடையே நல்லதொரு நட்புறவு இருந்தாலும் அஜித்தை கெடுத்தது ரஜினி தான் என்று மூத்த பத்திரிக்கையாரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

”அஜித் மீது ரஜினிக்கு என்றும் அக்கறை இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் அஜித்தை கெடுத்தது ரஜினி தான். ஆரம்ப காலங்களில் அஜித் மீடியா உடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். அன்போடும் மரியாதையோடும் நடத்துவார். ஆனால் இன்று மீடியாவை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஏதோ சந்திர கிரகணத்தில் வாழ்வது போல் தனித்து போனதற்கு ரஜினி தான் காரணம். ரஜினி அஜித்திடம் ”இந்த மீடியா பசங்க எல்லாரும் டேஞ்சரான ஆட்கள் இவர்களிடம் ரொம்ப நட்புறவு கொள்ள வேண்டாம்”.

#image_title

”உன் வாயை பிடுங்கி உன்னை காலி பண்ணிடுவாங்க, அவங்கள தள்ளியே வைய்” என்று சொல்லி மீடியாக்களிடம் இருந்து அஜித்தை பிரித்தது ரஜினி தான். இந்த அட்வைஸ்க்கு பின்னால் அஜித் மீது ஒரு அக்கறையும் இருக்கிறது. அதையும் மறுக்க முடியாது. ஆரம்ப காலத்தில் அஜித் பயங்கரமான லூஸ் டாக் பார்ட்டியாக இருப்பாரு. அவர்கிட்ட டைம் கேட்டா அஞ்சு நிமிஷம் விஜயை திட்டிவிட்டு தான் நேரமே சொல்லுவாரு, பயங்கர லூசு டாக்”.

”பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை நேர்காணல் எடுக்க சென்றார் என்றால் அதற்காக அரை மணி நேரம் பேசினாலும் ஒரு மணி நேரம் மற்ற விஷயங்களை பேசுவார். அதில் 50 நிமிடம் விஜய் பற்றி மட்டுமே பேசுவார். அப்படி கேரக்டராக இருந்தார் அஜித். இதற்காகவே அஜித்தை நேர்காணல் எடுக்க செல்ல வேண்டும் என்றால் பத்திரிக்கையாளர்கள் தயங்குவார்கள்,’அவரு அறுப்பாருங்க, விஜயை திட்டிக்கிட்டே இருப்பாருங்க’ அப்படின்னு பத்திரிகையாளர்கள் சொல்லுவாங்க. ரஜினி தான் இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்து அவரைப் பக்குவப்படுத்தி வேறு ஒரு ஆளாக மாற்றினார்”. என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.