கைதி 2க்கு பின் அதைவிட பெருசா ஒரு படம்… பக்கா பிளான் போடும் கார்த்தி…
Kaithi 2 : பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் கார்த்தி.
நடிகராவதற்கு முன் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்தவர் இவர். பருத்தி வீரனுக்கு பின் பையா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
தற்போது சர்க்கார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி அடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். கைதி படத்தின் முதல் பாகம் 6 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை பார்த்துதான் ரஜினி லோகேஷின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். அதுவரை அப்படி ஒரு கார்த்தியை ரசிகர்களை பார்த்தது இல்லை. இந்தப் படத்தில் கதாநாயகியோ, பாடல் காட்சிகளோ எதுவும் இல்லை. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களுக்கு பரபரப்பான திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
கூலி படம் ரிலீஸ் ஆன பின் ஒரு மாதம் கழித்து கைதி 2 படத்தின் வேலைகள் துவங்கவிருக்கிறது. கைதி 2 படம் கார்த்தியின் கெரியரில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக உருவாக உள்ளது
. லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது ‘கமல், விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர்களை இயக்கிவிட்டு மீண்டும் கார்த்தியை வைத்து படம் இயக்கப் போகிறீர்களே?’ எனக் கேட்டதற்கு ‘அவரும் பெரிய ஹீரோதான்.. என்னை முதலில் நம்பிய ஹீரோ அவர்தான்.. அவருக்கு கைதி 2-வை சிறப்பான படமாக கொடுப்பேன்’ என லோகேஷ் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் கைதி 2-வுக்கு பின் அதைவிட பெரிய பட்ஜெட் கொண்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கார்த்தி ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே ஹிந்தியில் இருந்து ஒரு இயக்குனரும், தெலுங்கில் இருந்து ஒரு இயக்குனரும், கன்னடத்தில் இருந்து ஒரு இயக்குனரும் கார்த்திக்கு கதை சொல்லி இருக்கிறார்கள். அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கைதி 2-வுக்கு பின் நடிக்க கார்த்தி திட்டமிட்டு இருக்கிறாராம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


