கூலியா இருந்து பஸ் கண்டக்டர் ஆனது எப்படி?.. ஓப்பனாக பேசிய ரஜினி..

Rajini Coolie: கடந்த 2ம் தேதி கூலி படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் ரஜினி பேசியது ஏற்கனவே சின்ன சின்ன செய்திகளாக வெளிய வந்தாலும் நேற்று மாலை சன் தொலைக்காட்சியில் முழுதாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது ரஜினி கூலி வேலை செய்ததையும் எப்படி பேருந்து நடத்துனராக மாறினார் என்பதையும் கூறினார். அது பற்றி பார்ப்போம்.

நான் பத்தாம் வகுப்பு முடித்த பின் அடுத்த வகுப்புக்கு செல்லவில்லை பள்ளியில் சேர அப்பா கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன்.
சினிமா ஆசையில் சென்னை போய் ஏதாவது வேலை செய்வோம்.. லைட் பாய் வேலை கொடுத்தாலும் செய்வோம் என முயற்சி செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. ஹோட்டலில் கூட வேலை செய்யும் முயற்சி செய்தேன் சரியாக அமையவில்லை. கையில் இருந்த காசு செலவாகிவிட்டதால் ஊருக்கு போக முடிவெடுத்தேன்.

ஊருக்கு போனால் எப்படியும் வீட்டில் பிரச்சனை நடக்கும்.. அப்பா கோபமாக இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்துதான் போனேன். ஆனால் வீடு அமைதியாக இருந்தது. எங்க அப்பா எதுவும் பேசவில்லை. ‘நாளையிலிருந்து கூலி வேலைக்கு போ’ என்றார். சரி போகிறேன் என சொல்லிவிட்டேன். உறவினர் ஒருவர் ஒரு மில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த மில்லில் எனக்கு கூலி வேலையை ஏற்பாடு செய்திருந்தார்கள்..

அங்கே மூட்டை தூக்கும் வேலை.. ஒரு மூட்டை தூக்கினால் பத்து பைசா.. 100 மூட்டை தூக்கினால் பத்து ரூபாய் கிடைக்கும்.. 5 பேர் சேர்ந்து நூறு மூட்டை தூக்கினால் ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். அந்த வேலை கஷ்டமாக இருந்தாலும் செய்தேன். ஒருமுறை மூன்று மூட்டைகளை தூக்கிக்கொண்டு ரொம்ப தூரம் போக வேண்டி இருந்தது.. வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் தள்ளி செல்ல முடியவில்லை. மூட்டை சரிந்து கீழே விழுந்தது. அதன்பின் ஒருவர் நண்பர் வந்து உதவி செய்தார்.

#image_title

ஒரு உறவினர் வீட்டில் திருமணம் நடந்தது.. அதில் கலந்து கொள்ள கோட் சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு போனேன். கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பேன். இளம் பெண்கள் எல்லாம் என்னையே பார்த்தார்கள். எனக்கு சந்தோசமாக இருந்தது. இதற்கிடையில் என் அப்பா எல்லோரிடமும் நான் கூலி வேலை செய்கிறேன் என சொல்லிவிட்டார். அதுவரை என்னை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்கு புரிந்து விட்டது. என் அப்பா பிஆர்ஓ வேலை பார்த்து விட்டார்.

அந்த உறவினர் என் அப்பாவிடம் என்னை பற்றி கேட்க ‘அவன் கூலி வேலை செய்கிறான் அதையே செய்யட்டும் விடுங்க’ என சொன்னார். ஆனால் அவர் விடவில்லை. பத்தாம் வகுப்பு படித்திருக்கிறான்.. கண்டக்டர் லைசென்ஸ் எடுத்தால் இவனுக்கு வேலை கிடைக்கும் என சொன்னார்.. என் அப்பா ஒரு வழியாக சம்மதித்து எனக்கு கண்டக்டர் லைசென்ஸ் எடுத்து கொடுத்தார்கள். அப்படித்தான் நான் பஸ் கண்டக்டராக மாறினேன்’ என ரஜினி மனம் விட்டு பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.