இப்படி செஞ்சுதான் 1000 கோடி வசூல்னு வடை சுட போறீங்களா?.. கூலியை கலாய்க்கும் புளூசட்டை மாறன்..

Coolie: ரஜினி நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு முன்பதிவு துவங்கியது.
கூலி படத்தை பார்க்க ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் இருப்பதால் எல்லா மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் சாதனை படைத்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே 55 கோடி வரை வசூல் ஆகி உள்ளது இரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே ரஜினி விஜய் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளின் டிக்கெட்டுகள் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும். ஆனாலும், ரசிகர்கள் அதை வாங்கிக் படம் பார்ப்பார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. என்னதான் அரசு டிக்கெட் விலையை நிர்ணயித்தாலும் முதல் நாள் விநியோகஸ்தர்கள் சொல்வதுதான் விலை. முதல் காட்சி 2000, 5000 என்று கூட விற்பார்கள்.. பெங்களூரில் முதல் காட்சி 2000 வரை பல தியேட்டர்களில் விற்கப்பட்டது.

#image_title

தமிழ்நாடுகளில் அந்த அளவுக்கு இல்லை என்றாலும் 500 ரூபாய் வரை விற்கிறார்கள். இந்நிலையில்தான் அப்படி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கும் விநியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.

டிக்கெட் விலை 190, 200 என இருக்கும் போது அதை 400 ஆக ஏற்றி விற்பனை செய்து ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் விநியோகஸ்தர் மீது நடவடிக்கை எடு’ என நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார்கள். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல சினிமா youtube விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘இப்படி எல்லாம் செய்துதான் ஆயிரம் கோடி வசூல் வடைகளை சுட போறீங்களா?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.