நானும் எஸ்.கேவும் இணையும் படம் வேற மாறி.. ஹைப் ஏத்தும் வெங்கட் பிரபு..
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார். நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக படம் எடுப்பது இவரின் பாணி. இவர் இயக்கிய முதல் படமே அப்படித்தான் இருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து அப்படத்தை உருவாக்கியிருந்தார். அப்படம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் வெற்றி அடைந்தது.
அந்தப் படத்திற்கு பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இளைஞர்களுக்கு பிடிப்பது போல படம் எடுப்பது இவரின் வழக்கம். அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அஜித்தின் கெரியரிலும் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி, கார்த்தியை வைத்து பிரியாணி என சில படங்களை இயக்கினார். ஆனால் அது ஓடவில்லை. சிறிது இடைவெளிக்கு பின் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லுப் கான்செப்டை மையமாக வைத்து இந்த படத்திற்கு வெங்கட் பிரபு அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை கட்டிப்போட்டது. படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்திற்குப் பின் தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. பல வருடங்களாகவே ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதில் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு மட்டுமே அமைந்தது. அதுவும் மங்காத்தாவுக்கு பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவே இல்லை. ஆனால் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க விஜய் சம்மதித்தார் அப்படி உருவான திரைப்படம்தான் கோட்.

இந்த படத்தில் அப்பா மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மகன் விஜயை இளமையாக காட்டி இருந்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். விஜய் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல காட்சியை அமைத்திருந்தார் வெங்கட் பிரபு. அதற்கு காரணம் கோட் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை இயக்கவிருந்தார் வெங்கட் பிரபு.
ஆனால் கோட் ரிசல்ட்டை பார்த்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பல பேர் மூலமாக தூது விட்டும் பல வழிகளில் முயன்றும் முயற்சி செய்தார் வெங்கட் பிரபு.
சிவகார்த்திகேயனோ பராசக்தி மதராஸி படங்களில் நடித்து வந்தார். மேலும், குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகர், டான் பட இயக்குனர், சிபி சக்கரவர்த்தி என பேசிக்கொண்டு இருந்தார் சிவகார்த்திகேயன். அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபு படத்திலும் நடிக்கவிருக்கிறார் .
இந்த இரண்டு படங்களுக்கான பூஜையும் ஒரே நாட்களில் நடக்க உள்ளது. மாதத்தில் 15 நாட்கள் வினாயக் சந்திரசேகர் படத்திலும் 15 நாள் வெங்கட் பிரபு படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் இணைவது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு ‘கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு இது வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும். அவரின் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதையை எழுதி முடித்து முழு கதையையும் சொல்லிவிட்டேன். சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளரும் செம ஹேப்பி.. இந்த படம் ஜாலியான அதே நேரம் நீங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருக்கும்’ என சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


