ஒரு வாரம் விஜயகாந்தை வச்சி செஞ்சிட்டேன்!.. மன்சூர் அலிகான் பகீர்!…
Captain prabakaran: கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். சில நடிகர்களுக்கு முதல் படமே பெயர் வாங்கி தந்துவிடும். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமாகி விடுவார்கள். மன்சூய் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் இது அமைந்தது.
இந்தப் படத்திற்குப் பின் பல படங்களிலும் தொடர்ந்து வில்லனாக நடிக்க தொடங்கினார் மன்சூர் அலிகான். விஜயகாந்தின் எல்லா படங்களிலும் மன்சூர் அலிகான் இருப்பார்.
வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான் ஒரு கட்டத்தில் அவரே படங்களை இயக்கி ஹீரோவாக நடித்த துவங்கினார்.

தற்போது காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் ரீரிலிஸ் செய்யப்பட்டது. இது தொடர்பான விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அன்பின் உருவமாக வாழ்ந்த இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேப்டனின் 100வது படத்தில் நான் அறிமுகம் ஆனேன். 60 குதிரைகள் ஆயிரம் துணை நடிகர்கள் மற்றும் அங்கே உள்ள மக்கள் என பலரும் அப்படத்தில் நடித்திருந்தனர். படத்தின் இறுதி காட்சி படம் பிடிக்கும்போதுதான் தம்பி பிரபாகரன் பிறந்தார்.. அது ஒரு சென்டிமென்ட்..

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சண்டை காட்சியை ஒரு வாரம் எடுத்தார்கள். நான் அப்போது புது நடிகன்.. சரியான பயிற்சி இல்லை என்பதால் நிறைய பயிற்சி கொடுத்து அந்த சண்டை காட்சியை எடுத்தார்கள்.. அந்த ஒரு வாரத்தில் கேப்டன் என்னை படுத்தியதை விட நான் அவரை படுத்தி விட்டேன்.. கேப்டன் பொறுமையாக எனக்கு சொல்லிக் கொடுத்து நடித்தார். செட்டை விட்டு வெளியேவே போக மாட்டார்.. சண்டை காட்சி கலைஞர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்.. எல்லோரிடமும் ஜாலியாக விளையாடு கொண்டிருப்பார்’ என மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


