சொந்த காசுல சூனியம் வைத்துக்கொள்ளும் சூரி.. சிவகார்த்திகேயனை பார்த்தும் திருந்தலையா?..

Soori: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பிரபலமானதால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகராக மாறினார். கிராமத்து படங்கள் என்றாலே சூரி அதில் காமெடி நடிகராக இருப்பார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால் என பலரின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்தார். அப்படி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தவரை வெற்றிமாறன் கூப்பிட்டு விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சூரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படமும் வெற்றி அடையவே சூரி தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தார்.

விடுதலைக்கு அடுத்து வந்த கருடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் கொட்டுக்காளி படம் வசூலை பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அடுத்து வந்த மாமன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இதனால் சூரியை வைத்து படம் தயாரிக்கலாம் என்கிற நம்பிக்கை எல்லா தயாரிப்பாளர்களுக்கும் வந்திருக்கிறது. ஆனால் தனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார்.

Sivakarthikeyan

இந்நிலையில் சூரி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க முடிவெடுத்திருக்கிறாராம். எனவே இனிமே அவர் நடிக்கும் படத்தை அவரே தயாரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. சூரியை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் சூரி செல்லும் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்களாம். சூரி அதிக சம்பளம் கேட்பதால் அவர்கள் படம் எடுக்க தயங்குகிறார்கள். எனவேதான் சூரி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்க திட்டமிட்டிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சூரியன் நண்பர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி நூறு கோடி வரை கடனாளியாக மாறினார். பல படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்து அந்த கடனை அடைப்பதற்கே அவளுக்கு அவருக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. இதுவெல்லாம் தெரிந்தும் சூரி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.