ரெண்டு பேரும் ஒத்த உசுருடா.. அலப்பறையை ஆரம்பித்த லோகேஷ்.. கூலி ஃபயர் ஸ்டார்ட்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மசாலா படங்கள் தான் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்யும் என்ற நிலையை மாற்றி கதையை மையமாக வைத்து அதை சுற்றி சுவாரஸ்ய கதாபாத்திரங்கள் அமைத்து தரமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் நின்றார் லோகேஷ். தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியுள்ளார்.
பேன் இந்தியா அளவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதில் ரஜினியுடன் அமீர்கான், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக ”மோனிகா” பாடலை இளசுகள் முதல் பெரியோர்கள் வரை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் ட்டிரெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் மற்றும் அனிருத் கூட்டணி நான்காவது முறையாக கூலி படத்திற்காக இணைந்துள்ளார்கள். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது அதுமட்டுமல்லாமல் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதேபோல இந்த முறையும் கூலி படத்திற்காக ஏற்கனவே ஹிட் பாடல்களை கொடுத்து அனிருத் அசத்தி இருந்தாலும் பின்னணி இசையில் இவரின் மேஜிக்கை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். படம் வெளிய வருவதற்கு முன்பு அந்தப் படத்தைப் பற்றி எமோஜி போட்டு ட்விட் செய்வது அனிருத் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது கூலி இசை வெளியீட்டு விழாவில், ”நான் இந்த மாதிரி இனி எமோஜி ட்விட் எல்லாம் போட மாட்டேன். காரணம் சில படங்கள் நன்றாக இல்லை என்றாலும் அதை போடுவதற்கான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளேன்”.

”இனி அப்படி போட மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த மேடையிலேயே கூலி படத்திற்கு பத்து கப் 10, 10 ஃபயர் வச்சிக்கலாம்” என்று கூறி இருந்தார். இன் நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,” நாங்கள் எங்கள் பயணத்தை ஒன்றாக தொடங்கிய இடத்தில் இருந்து இங்கே நாங்கள் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். ஒவ்வொரு முறையும் அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. அனிருத் எனக்கு சகோதரனை தாண்டி ஒரு புனிதமான உறவு எங்கள் இடையே இருக்கின்றது. ராக் ஸ்டார் அனிருத் அசத்துவோம்” என்று டுவிட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது படத்திற்கான பின்னணி இசையை அனிருத் முடித்துள்ளார் என்பது தெரிகிறது. ஏற்கனவே விக்ரம், மாஸ்டர் மற்றும் லியோ படங்களில் சிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அனிருத். கூலி படத்தில் ரஜினிகாந்த்துக்கு எந்த மாதிரியான மாஸ் பிஜிஎம் இருக்கும்.? அவரின் புல்லரிக்கும் பிஜிஎம்யை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


