TopCooku Dupe Cooku2: ரோபோ ஷங்கர் முதல் பிரீத்தா வரை… இரண்டாவது சீசன் போட்டியாளர்களின் அப்டேட்!
TopCooku Dupe Cooku2: சமையல் நிகழ்ச்சியில் புது இடம் பிடித்த முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2ல் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் அடங்கிய தொகுப்புகள்.
பொதுவாக சமையல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் கலந்து சமைத்து நடுவரிடம் கமெண்ட் வாங்குவார். ஆனால் முதல்முறையாக சமையல் போட்டியாளருடன் ஒரு சமையல் தெரியாத பிரபலம் கலந்துக்கொள்ளுவார். இப்படி ஆரம்பித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

அந்த தயாரிப்பு டீம் வெளியேறி சன் டிவியில் இணைந்தனர். அவர்கள் மூலம் டாப் குக்கு டூப் குக்கு ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வெங்கடேஷ் பட் நடுவராக இருந்தார். பல சீரியல் பிரபலங்கள் கலந்துக்கொண்ட நிலையில் யூட்யூப் பிரபலம் நரேந்திர பிரசாத் டைட்டிலை தட்டினார்.

இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் ஆகஸ்ட் 17ந் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்களான ஷிவானி நாராயணன், ரோபோ ஷங்கர், கிரண் ராத்தோர், பெசண்ட் ரவி, பிரீத்தா, டெல்னா டேவீஸ், வஹீசன், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


