ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey) கவிதையைத் தழுவி எடுக்கப்படுகிறது.
நோலன் படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் கசிந்தது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒடிசி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2026 ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: இயக்குநராகும் கென் கருணாஸ்!
director christopher nolans the odyssey movie shooting wrapped
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


