முன்பதிவில் மட்டும் இவ்வளவு கோடியா?.. வசூலை அள்ளும் கூலி!.. 1000 கோடி கன்பார்ம்!…
Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், அமீர்கான், சுருதிஹாசன், உபேந்திரா என பலரும் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல் இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
ரிலீசுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை 8ம் தேதி துவங்கியது. வெளிநாடுகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் கூலி படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். சில மணி நேரங்களிலேயே பல காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இந்த அளவுக்கு முன் பதிவு செய்யப்படவில்லை என டிரேடிங் வட்டாரங்கள் சொல்கிறது. இந்நிலையில் முன்பதிவிலேயே கூலி படம் 55 கோடி வசூலை பெற்றிருக்கிறது முதல் பத்து நாட்கள் எல்லா காட்சிகளுமே பல மாநிலங்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.
கூலி படம் ஏற்கனவே ரிலீசுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தொட்டது. அதாவது கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வெளிநாடு தியேட்டர் உரிமைகள், இசை, சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் என 500 கோடி வியாபாரத்தை தாண்டியது எனவே இப்படம் 1200 கோடி வசூலை தாண்டும் என பலரும் சொன்னார்கள். இதுவரை எந்த ஒரு நேரடி தமிழ் படமும் 1000 கோடி வசூலை தொடவில்லை. ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படம் 650 கோடி வரை வசூல் செய்தது. தற்போது அந்த வசூலை கூலி படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இப்படம் 1000 முதல் 1200 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


