அஜித் நடிப்பை பார்த்து ஜெர்க் ஆன பாலிவுட்.. அதான் ரீமேக்கே பண்ணலயா?

நேற்று ஒரே நாளில் அஜித் ஷாலினி இருக்கும் ஒரு வீடியோ சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலானது வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்பதால் மனைவி ஷாலினிக்கு குங்குமம் வைத்து அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினார் அஜித் உடனே ஷாலினி அஜித் காலில் விழுந்து வணங்குவதும் அதற்கு அஜித்திடமிருந்து வீட்டில் போய் நான் காலில் விழனும் என்ற கமெண்ட் வந்ததும் அதை பார்த்த ரசிகர்கள் இருவருக்குள்ளும் எந்த அளவு காதல் இருக்கிறது என்ற வகையில் அந்த வீடியோவை ரசித்து வருகிறார்கள்.

திருமணம் ஆகி 25 வருடங்களை கடந்தும் இவர்களுக்குள் இருக்கும் அந்த காதலை அந்த வீடியோ மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது அஜித்தை பொறுத்த வரைக்கும் தொழில் பேஷன் குடும்பம் குழந்தைகள் என எல்லாவற்றையும் சமநிலையில் கொண்டு செலுத்தி வருகிறார்.

அதுதான் அவருடைய தொடர் வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது தற்போது கார் ரேஸில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வரும் அஜித் அவ்வப்போது குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்தி வருகிறார் அதனால் தான் அந்த வரலட்சுமி விரத நாளில் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்து மனைவிக்காக அந்த விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

கார் ரேஸ் எல்லாம் முடிந்து மீண்டும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அவருடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் அஜித் கடைசியாக அவருடைய நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

அதனால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கு தான் இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது இன்னும் இந்த படத்தைப் பற்றிய முழு தகவல்கள் வெளிவரவில்லை அதற்கான வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன இந்த நிலையில் அஜித் நடித்த ஒரு படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய பயந்தார்கள் அதனால் தான் இன்னும் தெலுங்கு ஹிந்தியில் அந்த படம் ரீமேக் பண்ண வில்லை என கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதுதான் வரலாறு திரைப்படம் அந்தப் படத்தில் அஜித் ஃபெமினியின் ரிலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதைப் பார்த்த தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்கள் இப்படி ஒரு இமேஜ் உள்ள நடிகரால் எப்படி இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க முடிந்தது கண்டிப்பாக எங்களால் முடியாது என்ற பயந்தே தெலுங்கு ஹிந்தியில் அந்தப் படத்தை ரீமேக் செய்யவில்லையாம் கன்னடத்தில் மட்டும் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டதாம்.

அதேபோல அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தையும் பார்த்த பாலிவுட் தெலுங்கு சினிமா அஜித்தின் அந்த நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டார்களாம் வில்லன் படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார் அஜித் அதனால் அந்தப் படத்தில் அவர் எப்படி நடித்தாலும் ரசிக்க தோன்றும் ஆனால் இங்கு நாங்கள் நடித்தால் எல்லோரும் சிரித்து விடுவார்கள் என்று தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் நடிகர்கள் கூறியதாக கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்

Varalaaru

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.