எப்பவும் நான்தான் கிங்!.. டிக்கெட் முன்பதிவில் லியோவை தாண்டிய கூலி.. நிரூபித்த ரஜினி..

Coolie: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரின் ஜெயிலர் படம் 650 கோடி வரை வசூல் செய்தது. ரஜினிக்கு போட்டியாக சொல்லப்படும் விஜயின் படங்கள் கூட இதுவரை அந்த வசூலை பெற்றது இல்லை.

ஆனால் சில படங்களில் விஜய் அதிக சம்பளம் வாங்கியதாலும், அவரின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை செய்ததாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார்.. அவர்தான் நம்பர் ஒன் என சிலர் பேச துவங்கினார்கள். இது விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். இன்னமும் அது நிற்கவில்லை.

coolie
#image_title

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்பதிவு மிகவும் அதிக அளவில் இருக்கிறது. ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் 50 காட்சிகளுக்கான டிக்கெடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

உலக அளவில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் 50 கோடி அளவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படமும் இந்த அளவுக்கு டிக்கெட் முன்பதிவில் வசூலை அள்ளியது இல்லை. ரஜினிக்கு போட்டி என சொல்லப்படும் விஜயின் லியோ படம் கூட முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் ரஜினியின் கூலி படம் பெரிய நகரங்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இதன் மூலம் லியோ பட சாதனையை கூலி முறியடித்து இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.