சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கும் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார்கள்.

இவர்களின் தனித்துவமான நகைச்சுவை விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் மீம்ஸ்களாக மாறி இணையத்தில் வைரலாகும்.

இவர்கள் இருவரும், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது.

இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, பரிதாபங்கள் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் பாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இவர்களது சொசைட்டி பாவங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.