அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து ஆடிய இந்திய அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் , அதன் பின்னர் விக்கெட்களை மளமளவென இழந்தது. இதனால் அந்த அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி பவுலர் முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் இரண்டாம் இடத்தில் 17 விக்கெட்களோடு உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


