தேசிய விருது பெற்ற பெண் இயக்குநரின் அடுத்த படம்!

பெண்கள் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் குறித்து எடுத்த டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா என்ற ஆவணப் படத்திற்காக தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விபா பக்ஷி, அடுத்து சன் ரைஸ் என்ற 45 நிமிட பெண் குழந்தை உரிமை குறித்த ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளார்.

இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த ஹரியானா மாநிலத்தில், இதற்கு கிராம பஞ்சாயத்துகளே காரணம் என்பதை 2 ஆண்டுகள் அங்கேயே சுற்றியலைந்து சில சமூக ஆர்வலர்கள் உதவியுடன் படமாக்கியுள்ள விபா பக்ஷி, விரைவில் உலக நாடுகளில் இதை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.