சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் சில சொந்த காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளிப் போட்டிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது புதிய படமொன்றில் நடிக்கிறார். லாபம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடக்கவிருக்கிறது என்றனர் படக்குழுவினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


