பாட்டியான வெள்ளாவி நடிகை!
அண்மையில் வெளியான பாத்லா’ படம் டாப்ஸி பன்னுவுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. படத்தின் இறுதிக் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது என்று சமூக வளைத்தளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் டாப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சுடுதலில் பிரபலமான சந்த்ரோ தோமா, பிரகாஷி தோமா ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் சான்த் கி ஆங்க் என்ற இந்தி படத்தில் 60 வயது மூதாட்டியாக நடித்துள்ளார் டாப்ஸி.

ஏற்கெனவே அனுபவ் சின்ஹாவின் முந்தைய படமான முல்க் என்ற படத்தில் வழக்குரைஞராக நடித்த டாப்ஸி, தற்போது சின்ஹா தயாரிக்கும் தப்பாட் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


