வெள்ளி விழா பிரபஞ்ச அழகி!

1994-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை,  தற்போது  43 வயதாகும் சுஷ்மிதா சென் தன் காதலர் மற்றும் பெண் குழந்தைகளுடன் அண்மையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

என் தாய்நாடு இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் வகையில் அன்றைய போட்டியில் பங்கேற்ற 77  பெண்களில் இந்தியாவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தியா சார்பில் அப்போது  18 வயதான என்னை போட்டிக்கு அனுப்பி வைத்த குழுவினருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும்  நன்றி என்று  தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தகவலையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்  சுஷ்மிதா சென்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.