என் குடும்பத்தினரும், சந்ததியினரும் உழைத்துச் சாப்பிட வேண்டும்! என்.எஸ்.கே விளக்கம்!


திருவாங்கூர்  சமஸ்தானத்து  ராஜா,  கலைவாணர்  என்.எஸ். கிருஷ்ணனின் தீவிர ரசிகர். ஒரு முறை மகாராஜா வைத்த  விருந்தில் கலைவாணர் கலந்து கொண்டார்.

அப்போது  கலைவாணரை  கௌரவிக்க  முடிவு செய்திருந்த  மகாராஜா, கலைவாணர் அவர்களே  எனது எஸ்டேட்  ஒன்றைத் தங்களுக்கு  அன்புப் பரிசாக தர விரும்புகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று  கூறிவிட்டு  அந்த சொத்துக்கான  பத்திரங்கள்  அடங்கிய உறையை  கலைவாணரிடம்  நீட்டினார் மகாராஜா.

அதை வாங்காத  கலைவாணர், மகாராஜா  இவ்வளவு பெரிய  சொத்தை தாங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்தால்,  என் குடும்பம்  தலைமுறை , தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடப் பழகிவிடும். எப்போதுமே என் குடும்பத்தினரும், சந்ததியினரும்  உழைத்துச் சாப்பிட வேண்டும்  என்று நான் விரும்புகிறேன் என்று  கூறி அந்தச் சொத்தை  வாங்க மறுத்து விட்டார்.

மகாராஜா  ஆச்சரியத்தின் எல்லைக்கே  சென்றுவிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.