நடிகை ரேவதி இயக்கும் புதிய படம்!

எண்பதுகளின் தொடக்கத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் இந்திப் படமான அர்த் மீண்டும் தயாராகிறது. படத்தில் இரண்டு நாயகிகள். ஸ்மிதா பாட்டில், ஷபானா ஆஸ்மி.

இந்தியில் மீண்டும் உருவாகும் இந்தப் படத்தை இயக்குபவர் நடிகையும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரேவதி.  தமிழில் மறுபடியும் என்ற பெயரில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் அர்த் தயாரானது அதில் ஒரிஜினல் படத்தில் ஷபானா ஆஸ்மியின் பாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார். மறுபடியும் புதிதாக தயாராகும் ஹிந்தி "அர்த் படத்தில் ஷபானாவின் பாத்திரத்தில் நடிப்பவர் ஸ்வர பாஸ்கர். ஸ்மிதா பாத்திரத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கிறார்.
 - ரய்யான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.