இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ஜேஎஸ்எம் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்திரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்திரா படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் அஜ்மல் தக்‌ஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படம் ஆக. 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Vasanth Ravi (@iamvasanthravi)

The release date of the first song of the film Indira starring Vasanth Ravi has been announced.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.