மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட்
துபாய்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளையில் கேப்டன் ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தரவரிசையில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசியாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்திருந்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 731 புள்ளிகளுடன் அவர், முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


