கூலி படத்தின் ஓடிடிக்கு இத்தனை நாள் கேப்பா? அதை நீங்க இல்ல நாங்க முடிவு பண்ணனும்…

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் தற்போது ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனர் என்ற அடையாளம் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்து இயக்கிய எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிலும் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் சூப்பர்டூப்பர் ஹிட் பெற்றது.

அதை தொடர்ந்து விஜயை வைத்து லியோ மற்றும் மாஸ்டர் படங்களை இயக்கினார். இப்படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் லுக்கே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் லோகேஷின் அடையாளமான எல்சியூ என்ற பிணைப்பு இல்லாமல் ஒரு படத்தினை இயக்க வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பு கொடுத்த கண்டிஷனுடன் லோகேஷ் இந்த படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து உள்ளனர்.

32 வருடங்கள் கழித்து சத்யராஜ், தெலுங்கு ஸ்டார் நாகர்ஜூனா, மலையாளத்தின் டிரெண்டிங் நடிகர் ஷோபின் ஷொபீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்தில் பாலகிருஷ்ணா, அமீர்கான், உபேந்திரா உள்ளிட்டோரும் இணைந்து இருப்பதால் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.

இப்படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையும் எனவும் பேச்சுகள் எழுந்து வருகிறது. கூலி படம் மிகப்பெரிய எண்ணிக்கையில் வட இந்தியாவிலும் வெளியிட இருக்கின்றனர். இதனால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸும் 8 வாரங்கள் கழித்து என்று கூறப்படுகிறது. ஆனால் இதே போல பெருமையாக கமல்ஹாசன் தன்னுடைய தக் லைஃப் ரிலீஸின் போது சொல்லி இருந்தார். ஆனால் படம் ரிலீஸான சில மணிநேரங்களிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

படம் வசூலில் பெரிய அடி வாங்கிய நிலையில் 6 வாரத்திற்குள் படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடிக்கு எடுத்து வந்துவிட்டது. இந்நிலையில் கூலிக்கும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரசிகர்கள் கருத்தை வைத்து ஓடிடி வெளியீட்டில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.