ஆர்சிபி அணியின் மதிப்பு ரூ.2,313 கோடியாக அதிகரிப்பு: சிஎஸ்கே-வின் மதிப்பு சரிந்தது

கொச்சி: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவை பின்னுக்குத்தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) முன்னிலை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ஆர்சிபி அணியின் மதிப்பு 269 மில்லியன் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,313 கோடியாக அதிகரித்துள்ளது. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவின் மதிப்பு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் மதிப்பு ரூ.2,021 கோடியாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.