‘அயோத்தி’ பட ரீமேக்கில் நாகார்ஜுனா
சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, புகழ் என பலர் நடித்த படம், ‘அயோத்தி’. டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, அடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது அவருடைய நூறாவது படம். அதையடுத்து ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள்.
Source : www.hindutamil.in
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

