கேப்டன் ஷுப்மன் கில் 2-ம் இன்னிங்ஸிலும் சதம்: இந்தியா 484 ரன்கள் முன்னிலை | ENG vs IND
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 269 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி தற்போது 484 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்கள், இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்தன. 180 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. நான்காம் ஆட்டத்தின் தொடக்கத்தின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


