சூர்யா சேதுபதியின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!
சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை (ஜூலை 4) ரிலீஸ் ஆகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

