அனிருத் கூடயும் முட்டிக்கிச்சா?!. அந்த இசையமைப்பாளரிடம் போன சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan: தனுஷால் சினிமாவில் வளர்ந்தவர்தான் சிவகார்த்திகேயன். தனது 3 படத்தில் எஸ்.கே.வை சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். அதன்பின் மெரினா படத்தின் மூலம் ஹீரோவானாலும் அந்த படம் ஓடவில்லை. சிவகார்த்திகேயனை வளர்த்துவிட ஆசைப்பட்ட தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் அவரை ஹீரோவாக போட்டு எதிர் நீச்சல் படத்தை எடுத்தார்.

அதோடு தனது படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத்தை அந்த படத்திற்கு இசையமைக்க வைத்தார். படமும் ஹிட். பாடல்களும் ஹிட். அதேபோல் காக்கி சட்டையிலும் இதுவே நடந்தது. இப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் தனுஷும், அனிருத்தும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

ஒருகட்டத்தில் தனுஷுக்கும், அனிருத்துக்கும் முட்டிக்கொள்ள தனுஷின் படங்களுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்க துவங்கினார்கள். அதேநேரம் அனிருத்தை தனது பக்கம் இழுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்திற்கு கூட அனிருத்தே இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கரிடம் பேசி வருகிறார்களாம். சாய் அபயங்கர் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சூர்யாவின் கருப்பு, லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் என கையில் 15க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார். இவரின் இசையில் ஒரு படம் கூட இன்னமும் வெளியாகவில்லை. ஆனாலும், பெரிய நடிகர்களின் படங்களில் இசையமைக்க இவரை தேடி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அனிருத்தும் நிறைய படங்களில் இசையமைத்து வருவதால் ‘என்னால் முடியாது’ என அவர் சொல்லிவிடவே வாய்ப்புகள் சாய் அபயங்கருக்கு வருகிறது என்கிறார்கள். அதோடு, அனிருத்தோடு ஒப்பிட்டால் இவருக்கு மிகவும் குறைவான சம்பளம்தான். அதுவும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.