அஜித்தின் புதிய படத்தை தயாரிக்கப்போவது அவரா?!.. யார்தான்பா புரடியூசர் சொல்லுங்கப்பா?!..

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் பெரும் குழப்பமாக இருக்கிறது. இதுவரை அஜித்தின் படங்களுக்கு தயாரிப்பாளர் சுலபமாக கிடைத்துவிடுவார். அதற்கு காரணம் விஜயை விட குறைவான சம்பளத்தையே அஜித் வாங்கி வந்தார். வாரிசு படமும் துணிவு படமும் ஒன்றாக வெளியானது.

வாரிசு படத்திற்காக விஜய் 110 கோடி சம்பளம் வாங்கினார். துணிவு படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் 70 கோடி. அதாவது விஜயை விட 50 கோடி குறைவாகவே வாங்கினார். கோட் படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் பெற்றபோது, குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் 165 கோடி வாங்கினார்.

ஒரு நடிகர் தன்னுடைய படங்கள் எவ்வளவு வசூலை பெறுகிறது?.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபத்தை கொடுக்கிறது? என்பதை வைத்துதான் தனது சம்பளத்தை முடிவு செய்ய வேண்டும். ஆனால், விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தனது சம்பளத்தை அஜித் முடிவு செய்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில், பல வருடங்களாகவே இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு விஜய் வாங்கியுள்ள சம்பளம் 225 கோடி என்கிறார்கள்.


குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு அப்படம் 70 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து ஆதிக் இயக்கும் படத்தை இந்நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் தரப்பில் 180 கோடியை சம்பளமாக கேட்க 100 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என சொல்லிவிட்டது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

எனவே, சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் என பல தயாரிப்பாளர்களிடமும் அஜித் தரப்பில் பேசப்பட்டது. அஜித் படங்களுக்கு இருக்கும் வியாபாரத்தை கணக்குப்போட்ட அந்நிறுவனங்கள் ‘அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது’ என கைவிரித்துவிட்டது. எனவே, தனது மாமனார் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கேட்கலாமா என்கிற எண்ணமும் ஆதிக்கிற்கு வந்தது.

இந்நிலையில், இப்போது தமிழில் பல படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்துவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் அடிபடுகிறது. இந்நிறுவனம்தான் குட் பேட் அக்லி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது. இதற்கு முன்பெல்லாம் அட்வான்ஸாக சில கோடிகளை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் 5 கோடியை தனது அக்கவுண்ட்டில் போட்டுவிட வேண்டும் என அஜித் சொல்லிவந்தார். ஆனால், இப்போது சம்பளத்தில் பாதியை அட்வான்ஸாக கொடுத்துவிட்டு மீதியை ஷூட்டிங் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்கிறாராம்.

எனவேதான், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது என்கிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் இந்நிறுவனே அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.