`வெற்றிமாறன் டு பிரேம்குமார்... 2 வருடம் 10 படங்கள் - இயக்குநர் பட்டியலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ்.

இவரின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம், தேவி, கோமாளி, எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், பி.டி. சார் என வணிக ரீதியிலான வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், தனது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை எக்ஸ் தளத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

வெற்றிமாறன்

அந்தப் பட்டியலில், சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96, `மெய்யழகன் இயக்குநர் பிரேம்குமார், `2018 - Everyone Is A Hero மலையாள திரைப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், `கனா, நெஞ்சுக்கு நீதி இயக்குநர் அருண்ராஜா காமராஜ், `போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, `கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா அய்யாவு, `டாடா, `கராத்தே பாபு இயக்குநர் கணேஷ் பாபு ஆகிய 10 இயக்குநர்கள் இருக்கின்றனர்.

வீடியோவைக் காண பின்வரும் லின்கை கிளிக் செய்யவும்...

https://x.com/VelsFilmIntl/status/1938458267291947369

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.