Paranthu Po: `எங்க இயக்குநர் ஆர்டிஸ்டுகளை குழந்தை மாதிரி பார்த்துக்கணும்’னு சொல்லிருக்காரு.. - ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பறந்து போ.

இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.

பறந்து போ

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராம், "எங்க இயக்குநர் (பாலு மகேந்திரா) ஆர்டிஸ்டுகளை குழந்தை மாதிரி பார்த்துக்கணும்’னு எனக்கு சொல்லிருக்காரு.

அவுங்க முகம் தான் திரையில வருது அதனால எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கக்கூடாது’னு சொல்லிருக்காரு. அவுங்க மனம் கோணுச்சுனா திரையில அது பிரதிபலிக்கும்.

மொத்தம் 68 நாள் சூட்டிங் ஆனா 90 நாள் சூட்டிங் நடந்துச்சு” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்நிகழ்வில் பேசிய பி.சி ஸ்ரீராம், ‘ இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ மிகச்சிறந்த திரைப்படம். பார்வையாளர்கள் மீண்டும் சினிமா மீது காதல் வாயப்படப் போகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள.

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்.

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.