லவ் மேரேஜ் முதல் விமர்சனம்.. கோவையில் படம் பார்த்தவர்கள் விக்ரம் பிரபுவை கொண்டாடினார்களா?..
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று கோயம்பத்தூரில் வெளியிடப்பட்டது. அப்படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் யானை பாகனாக நடித்த விக்ரம் பிரபுவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்று குவித்தது.
அதை தொடர்ந்து அவர் நடித்த இவன் வேற மாதிரி, வெள்ளைக்கார துரை, சிகரம் தொடு, ரெய்டு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. ஆனால் அவர் துணை நடிகராக நடித்த பொன்னியின் செல்வன், இறுகப்பற்று போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
மேலும், தற்போது விக்ரம் பிரபு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்முக பிரியன் இயக்கியுள்ள லவ் மேரேஜ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் நாளை ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லவ் மேரேஜ் படத்தில் சரியான வயதில் திருமணமாகாத ஆணின் மனநிலையையும், அவர் சந்திக்கும் சூழ்நிலைகளையும் நகைச்சுவை கொண்ட ஒரு குடும்பப் படமாக உருவாக்கியுள்ளனர். மேலும், திருமணத்திற்கு வயது தேவையில்லை என்பதை விளக்கி ட்விஸ்ட் மற்றும் பல கதை திருப்பங்களுடன் இப்படம் 90s கிட்ஸ்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது.
லவ் மேரேஜ் படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் படம் நகைச்சுவை கலந்த குடும்ப கதையை கொண்டுள்ளதாகவும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான படம் என்றும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். முதல் பாதி முழுவதும் இடம்பெறும் காமெடி காட்சிகள் எல்லாம் படத்தை ரசிக்க வைக்கின்றன. விக்ரம் பிரபு வழக்கம் போல இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி கணேசன் நிச்சய தாம்பூலம் படத்தில் நடித்ததை போலவே விக்ரம் பிரபுவின் நடிப்பு உள்ளது என ஒரு ரசிகரும், படத்தை தாராளமாக குடும்பத்தோடு பார்க்கலாம் என்று பல ரசிகர்கள் பப்ளிக் ரிவ்யூவில் பேசியுள்ளனர்.
மேலும், நாளை இப்படத்தை காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதையடுத்து தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டியுடன் நடித்துள்ள காதி படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார் விக்ரம் பிரபு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


