ஹாலிவுட்டுக்கு செல்லும் சரத்குமார் மகள்!.. வரலட்சுமிக்கு அடித்த குபேர யோகம்!.. கல்யாண அதிர்ஷ்டமா?..

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், தாரை தப்பட்டை, மாரி 2, ராயன் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, நெகடிவ் ரோல் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களிலும் வித்தியாசமாக நடித்து பாராட்டுப் பெற்றுள்ளார்.


மேலும், சில வெப் தொடர்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாஸ் சச்தேவுடன் தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். நிக்கோலாஸ் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் ஒரு மகளின் தந்தை என்றும் தகவல்கள் பரவின.

வரலட்சுமி சந்திரன் ருட்னம் இயக்கத்தில் ஜெர்மி ஐயன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ரிசானா எ கேஜ்டு பேர்ட் (RIZANA - A Caged Bird) என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிட்டில் அறிமுகமாகவுள்ளார். இது ஒரு சட்டம் மற்றும் நீதி தொடர்பான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இருந்து நடிகைகள் பாலிவுட்டில் நடிக்கக் கிளம்பியுள்ள நிலையில் வரலட்சுமிக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவரது முக்கியமான தருணமாக இருக்கும் என்கின்றனர். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜெரமி இரான்ஸுடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.