ஸ்ரீகாந்தை தொடர்ந்து அந்த நடிகருக்கு சம்மன்!.. வரிசையா சிக்க போறாங்க!...

Srikanth: ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஸ்ரீகாந்த். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் காதல் படங்களில் நடித்தார். அவரின் சில படங்கள் தோல்வி அடைந்ததால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு ஹீரோவின் அண்ணன், போலீஸ் அதிகாரி வேடம் என கிடைத்தது.

சமீபத்தில் ஒரு பாரில் நடந்த பிரச்சனையில் பிரதீப் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் கொக்கைன் எனும் போதைப்பொருள் இருந்தது. விசாரணையில் அவர் போதைப்பொருளை வாங்கி பலருக்கும் சப்ளை செய்தது தெரியவந்தது. எனவே, போதை மருந்து தடுப்பு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் ஆப்பிரிக்க நாடானா கானா எனும் ஊரை சேர்ந்த ஒருவரிடம் பிரதீப் தொடர்ந்து கொக்கைன் போதை மருந்தை வாங்கி பலருக்கும் கொடுத்திருப்பது தெரியவந்தது.

அதில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர் என்பது தெரியவர நேற்று ஸ்ரீகாந்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், தான் போதைமருந்து பயன்படுத்தவில்லை என ஸ்ரீகாந்த் மறுத்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அவரின் ரத்தமாதிரியில் பரிசோதனை செய்ததில் அவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அதன்பின் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமின் வாங்கும் முயற்சியில் இருக்கிறார்.


இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால், அவர் இப்போது படப்பிடிப்பிற்காக கேரளா சென்றிருக்கிறார். எனவே, அவருக்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் அவரிடமும் போலீசார் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் பலரும் போதை மருந்து பயன்படுத்தியிருப்பதாக புகார் எழுந்திருப்பதால் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.