மொத்த காசும் போச்சே!.. குபேரா படம் இவ்வளவு கோடி நஷ்டமா?!.. ஐயோ பாவம்!..

Kubera movie: தனுஷ் இப்போதெல்லாம் நேரடி தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். சில படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக துவங்கிவிட்டது. இந்நிலையில், அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் குபேரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தன்னுடைய பல லட்சம் கோடி கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற ஒரு அரசு பிராஜெக்டை கைப்பற்றுகிறார். மேலும், 4 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பினாமியாக்கி பணப்பறிமாற்றங்களை செய்கிறார்கள்.

அதில் ஒரு பிச்சைக்காரராக தனுஷ் இருக்கிறார் வேலை முடிந்ததும் பிச்சைக்காரர்களை கொலை செய்ய திட்டமிட தனுஷ் அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் தனுஷின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.


அதேநேரம் படத்தின் 3 மணி நேர நீளம், போரடிக்கும் இரண்டாம் பாதி, திருப்தியில்லாத படத்தின் இறுதிக்காட்சி போன்ற நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது. ஆர்ட் பிலிம் போல இருக்கிறது எனவும் சிலர் சொன்னார்கள். முதல் பாதி டாக்குமெண்டரி படம் போல இருக்கிறது என சிலர் சொன்னார்கள். தமிழகத்தில் இது தனுஷ் படம் போலவும், ஆந்திராவில் இது நாகார்ஜுனா படம் என்பது போலவும் பார்க்கப்பட்டது.

120 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக சொல்லப்படுகிறது. படம் வெளியான 3 நாட்களில் இப்படம் 50 கோடி வசூலை தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் இப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்றாலும் தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள். இப்படத்தின் தமிழ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் 18 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால், வசூல் இல்லாத காரணத்தினால் அந்நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.